சாவகச்சேரி .இன்று அதிகாலை பெண் மீது வாள்வெட்டு!

0
9

சாவகச்சேரி – தச்சன்தோப்பு பகுதியில், இன்று அதிகாலைகொள்ளையிடும் நோக்குடன் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், தமது திட்டம் நிறைவேறாத நிலையில், அங்கிருந்த பெண் ஒருவரை, வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

முகங்களை துணிகளால் மறைத்துவாறு கூரிய ஆயுதங்களுடன் அக்கொள்ளை கும்பல் வந்ததாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்தவர்கள் அபாய குரல் எழுப்பியதை அடுத்தே, கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை வாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில், காயத்துக்குள்ளான பெண், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.