சிஎஸ்கே அணியில் வாட்சனின் எதிர்காலம் முடிந்துவிட்டது..?

  0
  6

  சிஎஸ்கே அணியில் இருந்து முக்கியமான வீரர் விரைவில் வெளியேற்றப்பட உள்ளார் என்று தகவல்கள் வருகின்றன. நேற்று நடந்த போட்டியிலேயே இது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. நேற்று சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மிகவும் திரில்லாக சென்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா 172 ரன்கள் எடுத்தது. அதன்படி ஆடிய சிஎஸ்கே அணி கடைசி நேர ஜடேஜா அதிரடி காரணமாக வெற்றி பெற்றது. கடைசி இரண்டு பந்தில் ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடிக்க.. சிஎஸ்கே அணி 178 ரன்கள் எடுத்து வென்றது.

  நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக களமிறங்கிய சிஎஸ்கே அணியில் டு பிளசிஸ் சேர்க்கப்படவில்லை. அவர் நீக்கப்பட்டு நேற்று வாட்சன் ஓப்பனிங் இறங்கி இருந்தார். தொடர்ந்து மோசமாக சொதப்பி வந்த காரணத்தால் வாட்சன் ஆடும் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ரூத்துராஜ் வந்தார்.

  இந்த நிலையில்தான் மீண்டும் வாட்சனுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று நேற்று மீண்டும் அவர் அணியில் எடுப்பட்டார். ஆனால் நேற்று போட்டியிலும் வாட்சன் சரியாக ஆடவில்லை. 19 பந்துகள் பிடித்தவர் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். எப்போதும் போல ஸ்பின் பவுலிங்கில் நேற்றும் அவுட் ஆனார்.

  வரிசையாக முக்கியமான ஆட்டங்களில் எல்லாம் வாட்சன் அவுட் ஆவதே வேலையாக வைத்து இருக்கிறார். இதுவரை நடந்த 13 போட்டிகளில் 3 போட்டியில் மட்டுமே வாட்சன் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படி ஆடி உள்ளார். வேறு எந்த போட்டியிலும் வாட்சன் சரியாக ஆடவில்லை. இவரின் அனுபவம் கருதி சிஎஸ்கே அணி நிர்வாகம் இவருக்கு நிறைய வாய்ப்பு கொடுத்தது.

  ஆனால் வாட்சனுக்கு பல முறை வாய்ப்பு கிடைத்தும் அவர் சரியாக ஆடவில்லை. தொடர்ந்து களத்தில் சொதப்பிக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் நேற்று அவரை டெஸ்ட் செய்யும் விதமாக மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நேற்று மீண்டும் மோசமாக ஆடினார். இதன் காரணமாக சிஎஸ்கே அணியில் வாட்சனின் எதிர்காலம் முடிந்துவிட்டது என்கிறார்கள்.

  நேற்று நடந்த போட்டியிலேயே தெரிந்துவிட்டது. வாட்சன் இனியும் சிஎஸ்கே அணியில் இருக்க மாட்டார். அவரின் இடத்தை ரூத்துராஜ்தான் நிரப்ப போகிறார். ரூத்துராஜ்தான் அடுத்த சீசனில் ஓப்பனிங் இறங்குவார் என்கிறார்கள்.

  வாட்சனை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது என்கிறார்கள். சிஎஸ்கே அணியில் முதலில் களையெடுக்கப்படும் வீரர் வாட்சன்தான் என்று கூறுகிறார்கள். இவரை அடுத்த வருடம் சிஎஸ்கே அணி மீண்டும் ஏலம் எடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.