சிங்கிள் மதர்!’ – கலங்கிய நடிகை வனிதா

0
38

சென்னை எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்துக்கு வந்த நடிகை வனிதா, `நான் மூன்று குழந்தைகளின் தாய், சிங்கிள் மதராகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று கண்ணீர்மல்க கூறினார். நடிகை வனிதா விஜயகுமாரும் பீட்டர் பாலும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத், வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பிறகு நடிகை வனிதா குறித்து பல தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் நடிகை வனிதா இன்று சென்னை எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

கடந்த சில வாரங்களாக என்னைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக ஒரு பெண், என்னைப் பற்றி கேவலமான தகவல்களை யூடியூபில் தெரிவித்து வருகிறார். தப்பான வீடியோக்களைப் போட்டுள்ளார். எல்லை மீறி போனதால்தான் என்னுடைய வழக்கறிஞர் ஸ்ரீதரிடம் ஆலோசித்தேன். அதனால்தான் அந்தப் பெண் மற்றும் என்னை விமர்சித்த தயாரிப்பாளர் ஒருவர் மீதும் ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். கொரோனா காலகட்டத்தில் பப்ளிசிட்டிக்காக என்னுடைய பெயரை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். நான் கொடுத்த புகாருக்கு சி.எஸ்.ஆர் காப்பியை போலீஸார் கொடுத்திருக்கிறார்கள்.

அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் உதவி கமிஷனரை சந்திக்க வந்துள்ளேன். ஒரு சில உண்மைகள் வெளியில் வரும்வரை பொறுமையாகவும் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். அவர்கள் இருவரைப் பற்றி என்னுடைய வழக்கறிஞர் கூறுவார். நான் மூன்று குழந்தைகளின் தாய். சிங்கிள் மதராகக் கஷ்டப்பட்டிருக்கிறேன். அப்பா, அம்மா சப்போர்ட் எனக்கு இல்லை. அந்த ஒரே காரணத்துக்காக நடுவில் வந்து சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தயாரிப்பாளருக்கும் இந்தக் கதைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனக்கும் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும் தொடர்பு இல்லை.

என் மகன் நிம்மதியாக இருக்கிறான். அவருடைய அப்பாவும் அவனை நல்லபடியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். என்னுடனும் அவர் தொடர்பில்தான் இருக்கிறார். எனக்கு 40 வயதாகுகிறது. எனக்கு ஒரு துணை வேண்டும் என்றுதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். மற்றவர்களைப் போல நான் யாரையும் ஏமாற்றவில்லை. தப்பும் பண்ணவில்லை. அதில் ஒரு சின்ன சிக்கல். அதை வழக்கறிஞர்கள் சட்டரீதியாகப் பார்த்துக்கொள்வார்கள். என்னைப் பற்றி கீழ்த்தரமாகப் பேசுவதால் எனக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இதற்கு மேல் மக்களும் மீடியாக்களும் சினிமாக்காரர்களும் உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களில் தயவு செய்து உள்ளே வராதீர்கள்.

சம்பந்தப்பட்ட 2 பேர் மீதும் 2 நாளில் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள். போலீஸாருக்கு அனைத்தையும் புரிய வைத்துவிட்டேன். யார் என் பெண் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார்கள்? எதையும் நம்பாதீர்கள். எல்லாம் பொய்யான செய்தி. போலீஸார் நடவடிக்கையில் அந்தப் பெண் யாரென்று தெரியும். சில நேயர்கள் பிக்பாஸில் ஏன் இப்படிப் பேசினீர்கள் என்று கமென்ட்ஸ்களில் சொல்லியிருக்கிறார்கள். பிக்பாஸ் ஒரு கமர்ஷியல் நிகழ்ச்சி. அதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமும் கிடையாது. அந்தப் பெண் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இதற்கு மேலும் என்னால் யார் கிட்டேயும் போய் நிற்க முடியாது. தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என்று போலீஸாரிடம் கூறியுள்ளேன். நான் ஸ்ட்ராங் உமன். நான் எதற்கும் சீக்கிரம் அசராதவள், நானும் ஒரு பெண். எவ்வளவுதான் இந்த உலகத்தில் போராட முடியும்?” என்றார் வனிதா.

இதையடுத்து, நடிகை வனிதாவின் வழக்கறிஞர் சில வீடியோக்களை மீடியா முன் காண்பித்தார்.