சிம்ம ராசிக்கு செல்லும் சூரியனால் அவதானமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

0
2159

நவகிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுபவர் தான் சூரியன். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அது அவர்களுக்கு தலைமைத்துவ திறன்களையும், நிர்வாகப் பணிகளில் செயல்திறனையும் வழங்கும். இதுவரை சூரியன் கடக ராசியில் இருந்தார். ஆனால் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசிக்கு இடம் பெயரவிருக்கிறார்.

பொதுவாக சிம்ம ராசியின் அதிபதி தான் சூரியன். சிம்ம ராசிக்கு சூரியன் செல்வதை சிம்ஹா சங்கராந்தி என்றும் அழைப்பர். ஆகஸ்ட் 16, 2020 அன்று, 18.56 மணியளவில் சூரியன் இடம் பெயர்கிறார் மற்றும் இவர் சிம்ம ராசியில் செப்டம்பர் 16, 2020 வரை இருப்பார். சூரியனின் இந்த இடப்பெயர்ச்சி ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும். உங்களுக்கு ஆகஸ்ட் 16, 2020 அன்று நடைபெறும் சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்

மேஷ ராசியில் சூரியன் 5 ஆவது வீட்டிற்கு இடம் பெயர்கிறார். இந்த வீட்டு சந்தோஷம், இன்பம், காதல், ரொமான்ஸ் மற்றும் படைப்பாற்றல் போன்றவற்றைக் குறிக்கிறது. 5 வது வீடு உங்கள் உள் மற்றும் வெளி ஆளுமை மற்றும் உங்கள் வாழ்க்கை அம்சத்தின் பெரும்பகுதியை நிர்வகிக்கிறது. 5 ஆவது வீடு நற்பெயர் மற்றும் நிலையைக் குறிப்பதால், சூரியனின் இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் ஒரு மகத்தான அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். உங்கள் காதல் வாழ்க்கையில் தடைகளை சந்திப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சற்று கடினமாக நடந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு இந்த காலக்கட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில சமயங்களில் நீங்கள் குழப்பத்தில் இருப்பீர்கள். அந்நேரத்தில் உங்கள் உள்மனம் உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் சூரியல் 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த வீடு உடைமை, நிலம், சொகுசு, வாகனம், ரியல் எஸ்டேட் மற்றும் தாய் போன்றவற்றைக் குறிக்கிறது. இது உங்கள் தாய், நிலம், வீடுடனான உங்கள் உறவை நிர்வகிக்கிறது. இந்த சூரியப் பெயர்ச்சி, உங்களுக்கு ஒரு கலவையானதாக இருக்கும். ஒருபுறம் தாயின் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். மறுபுறம் உங்கள் காதல் வாழ்க்கை மலரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அருமையான நேரத்தைக் கழிப்பீர்கள். அவர்கள் உங்கள் முடிவுகளை ஆதரிப்பார்கள் மற்றும் உங்கள் வெற்றியின் ஒரு பகுதியாக இருப்பார்கள். வீடு, வாகனம் போன்றவற்ற வாங்க நினைப்பீர்கள். இருப்பினும், எதை வாங்குவதற்கு முன்பும் சரியான ஆலோசனைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அலுவலகத்தில் உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கலாம்.

மிதுனம்

மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு தகவல் தொடர்பு, எழுத்து, மன நுண்ணறிவு, திறன்கள், உடன்பிறப்புகள், பழக்கவழக்கங்கள் மற்றும் ஆர்வங்களைக் குறிக்கும். இந்த சூரிய பெயர்ச்சி அரசாங்கம் மற்றும் அதிகாரம் தொடர்பான அம்சங்களைக் குறிப்பதால், அதிலிருந்து சில நன்மைகளைப் பெறலாம். நீங்கள் அரசு தேர்வுகளை எழுதியிருந்தால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் வேகத்தைக் கொண்டு வரும் மற்றும் பெரிய வளர்ச்சிக்கு உதவும். உங்களுக்கு வரவிருக்கும் வாய்ப்புக்களை நீங்கள் நிராகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன. அது நடக்காமல் பார்த்து, புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள்.

கடகம்

கடக ராசியில் சூரியன் 2 ஆம் வீட்டிற்கு செல்கிறார். இது பணம், நிதி, உடைமைகள் மற்றும் முதலீடுகளைக் குறிக்கிறது. உங்கள் ராசியுடன் சூரியன் நட்புறவைக் கொண்டிருப்பதால், இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் குடும்பத்துடன் நல்ல நேரத்தை அனுபவிப்பீர்கள் மற்றும் அது உங்களுக்கு மிகுந்த ஆதரவை வழங்கும். இந்த பெயர்ச்சியால் நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பீர்கள். இது உங்கள் வாழ்க்கையின் அமைதியையும், நன்மையையும் வழங்கும். வேலையைப் பற்றி கூற வேண்டுமானால், கடினமாக உழைத்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நிதி நிலைமையில் நேர்மறை மாற்றங்கள் நிகழும். உங்களின் சம்பளமும் உயரும். மொத்தத்தில் இந்த பெயர்ச்சியால் உங்கள் நிதி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் என்பதால், இந்த சூரிய பெயர்ச்சி உங்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். சிம்ம ராசியின் சூரியன் 1 ஆம் வீட்டிற்கு செல்கிறார். இது வெளிப்புற ஆளுமையை தீர்மானிக்கிறது. மேலும் இந்த வீடு புத்தி, ஆளுமை, ஈகோ, உடல், தோற்றம், மனோபாவம், பழக்கம், அதிர்ஷ்டம், ஆரோக்கியம், இயல்பு, குழந்தைப் பருவம் மற்றும் சுய வெளிப்பாடு ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த பெயர்ச்சி உங்களின் இயல்பில் ஒருவித அழுத்தத்தைக் கொடுக்கும். உங்களுக்குள் ஒரு தலைமைத்துவத்தை உணர்வீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் கவர்ந்திழுப்பீர்கள். முக்கியமாக வேலை செய்யும் இடத்தில், உங்கள் திறமைகளை அனைவரும் கவனிப்பார்கள். இது உங்களுக்கு உயர் பதவி கிடைக்கச் செய்யும். இந்த சூரிய பெயர்ச்சியால் ஒரு எதிர்மறை காரணியாக இருப்பது என்றால், அது கோபம். இந்த காலத்தில் உங்களின் கோபம் மற்றும் ஈகோ அதிகரிக்கும். எனவே நீங்கள் மனநிலையைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தேவையில்லாத மோதல்களை சந்திக்கக்கூடும். எனவே சற்று கவனமாக இருப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசியில் சூரியன் 12 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த வீடு முடிவைக் குறிக்கிறது. இது செலவுகள், வெளிநாட்டு நிலம், மயக்கம், சிறைவாசம் போன்றவற்றுடன், கூடுதலாக ஆன்மீகம், நன்கொடை மற்றும் தொண்டை ஆகியவற்றையும் குறிக்கிறது. இந்த சூரிய பெயர்ச்சி உங்களுக்கு சில சவால்களைத் தரும். இருப்பினும், இது மிகவும் சிக்கலாக இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான உணவு முறையை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்நேரத்தில் ஜங்க் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த சூரிய பெயர்ச்சியால் கண் நோய்கள், நோய்த்தொற்றுகள், செரிமான பிரச்சனைகள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிதி முன்னணியில், சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு செலவையும் திட்டமிட்டு பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு செய்ய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

துலாம்

துலாம் ராசியைப் பொறுத்தவரை, சூரியன் 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது ஆதாயங்களின் வீடு. இது வருமானம், செல்வம், ஆதாயம், பணம், நிதி மற்றும் புகழ் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இது உங்களின் நலம் விரும்பிகள், தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரர் ஆகியோரையும் நிர்வகிக்கிறது. இந்த பெயர்ச்சி காலம், உங்களுக்கு ஒரு குழப்பமான நேரமாக இருக்கும். இருப்பினும், உங்கள் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதர்களின் உதவியுடன், குழப்பத்தில் இருந்து வெளிவந்து, ஒரு சிறந்த நேரத்தைப் பெறுவீர்கள். சூரியன் தந்தையையும், அவருடனான உறவையும் குறிக்கிறது. எனவே இந்த காலக்கட்டத்தில் நீங்கள் உங்கள் தந்தையிடம் இருந்து ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் நிதியைப் பொறுத்தவரை, அற்புதமான நேரம். உங்கள் குடும்பத்தின் உதவியுடன், எதிர்காலத்திற்காக ஒரு நல்ல முதலீடு செய்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியைப் பொறுத்தவரை, சூரியன் 10 ஆவது வீட்டில் இடம் பெயர்கிறார். இந்த வீடு பணியிடம், தொழில், அதிகாரம், நற்பெயர், வணிக வெற்றி மற்றும் தோல்வி மற்றும் கௌரவம் ஆகியவற்றைக் குறிக்கிறது. தொழில் அம்சத்திற்கு சூரியன் மிகவும் அதிர்ஷ்டசாலி கிரகம். சூரியனின் ஆற்றலுடன், நீங்கள் தொழிலில் ஒரு நல்ல நிலைக்கு வளர முடியும். இந்த கிரகம் உங்களுக்கு நன்மையைத் தரும் கிரகம். தொழில் வாழ்க்கையில் ஒரு நல்ல செய்தியைப் பெற வைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவதானால், உங்கள் குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

தனுசு

தனுசு ராசியில், சூரியன் 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த வீடு நல்ல அதிர்ஷ்டம், கனவுகள், கொள்கைகள், உண்மை, வெளிநாட்டுப் பயணம், நல்ல கர்மா, உயர் படிப்பு, பயணம் மற்றும் நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கிறது. இத்தகைய வீட்டில் சூரியன் செல்லும் போது, அது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். உங்கள் கனவுகள் நனவாகும். அனைவரது மரியாதையையும் பெறுவீர்கள். மொத்தத்தில் எதிலும் வெற்றி காண்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் தொழில் முறை மற்றும் நிதி முன்னணியில், உங்கள் ஞானத்துடன் படிப்படியாக வளர்வீர்கள். ஏனெனில் நீங்கள் எதையும் கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த குணம் தான் உங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

மகரம்

மகர ராசியைப் பொறுத்தவரை, சூரியன் 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது நீண்ட ஆயுளின் ஆதிக்கம். இந்த வீடு நீண்ட ஆயுள், திடீர் ஆதாயங்கள், மரணம், லாட்டரி மற்றும் திடீர் இழப்புக்களை நிர்வகிக்கிறது. மேலும் உங்கள் எதிரிகளையும், வாழ்க்கையின் சிக்கல்களையும் குறிக்கிறது. இந்த ராசிக்காரர்களுடன் சூரியன் நட்புறவை பகிர்ந்து கொள்ளாததால், பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வாழ்வில் பல மாற்றங்களைக் காண்பீர்கள். அவற்றில் பல உங்களுக்கு ஆதரவாக இருக்காது. பெரிய சவால் நிறைந்த காலக்கட்டமாக இருப்பதால், வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. இருப்பினும், சம்பள உயர்வு கிட்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் நன்மை கிட்டும். குறிப்பாக திருமனமானவர்கள், துணையுடன் ஒரு நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசியில், சூரியன் 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது கூட்டாண்மை வீடு. இந்த வீடு மனைவி மற்றும் திருமண தோழமையை நிர்வகிக்கும் வீடு. சூரியன் ஒரு பெருமைமிக்க கிரகம். இது சனியுடன் மோசமான உறவைப் பகிர்ந்து கொள்கிறது. இதனால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் எழலாம். மேலும் இந்த காலத்தில் நீங்கள் மோசமான நடத்தையுடன், வாதங்களிலும் ஈடுபடுவீர்கள். எனவே அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவதானால், இந்த காலம் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் சில வாதங்களை உருவாக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அமைதியாக உட்கார்ந்து அவர்களின் மனதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது தான். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீன ராசியில் சூரியன் 6 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த வீடு நல்வாழ்வு, எதிரி, நோய், கடன் மற்றும் தடைகளைக் குறிக்கிறது. ஆகவே எல்லா வகையான நோய்களும், இடையூறுகளும் இந்த ஆதிக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்த பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழ்நிலைகளைக் கொண்டு வரும். சொல்லப்போனால் இந்த சூரிய பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். சிம்மத்திற்கு செல்லும் சூரியனால் உங்களுக்கு மரியாதைக்குரிய அலுவலகத்தில் நல்ல வேலை கிடைப்பதோடு, சமூகத்தில் உங்கள் இமேஜ் மேம்படும். மேலும் நிலுவையில் உள்ள புராஜெக்ட்டுகள் மற்றும் வழக்குகளில் வெற்றி கிட்டும். நீங்கள் ஆன்மீகத்தை நோக்கி சென்றால், மன அமைதி கிடைக்கும். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியான நேரத்தை செலவழிப்பீர்கள். சொந்த வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.