சிறைச்சாலை தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

0
25

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிட வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் சனிக்கிழமை முதல் நீக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க எமது செய்திப்பிரிவிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கைதியை சந்திக்க ஒருவருக்கு வாரத்தில் ஒருமுறை மா்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் உணவுப் பொருட்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.