சிறையில் அடைக்கப்படுவாரா ரியா? சுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பம்!

0
655

சுஷாந்த் மரணம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது காதலியான ரியா சக்ரவர்த்தியிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகரனா சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்து கிட்டதட்ட 2 மாதங்கள் ஆகவுள்ளன. ஆனால் இன்னமும் அவரது மரண விவகாரத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றனர்.

ஏற்கனவே சுஷாந்த் மரணத்திற்கு அவரது காதலியான ரியா சக்ரவர்த்திதான் காரணம் என சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். சுஷாந்தின் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் ரியா சக்ரவர்த்தியின் கணக்குக்கு அனுப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் வெளியிட்டனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடிகை ரியா சக்ரவர்த்தி அமலாக்கத்துறையில் ஆஜாரானார். அப்போது அவரிடம் சுஷாந்த் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து இன்று மீண்டும் அமலாக்கத்துறை அலுவலத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார் நடிகை ரியா சக்ரவர்த்தி.

ரியா சக்ரவர்த்தி மட்டுமின்றி அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, அவரது தந்தை இந்திரஜித் சக்ரவர்த்தி உட்பட ரியாவின் குடும்பமே அமலாக்கத்துறையின் இன்று ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சுஷாந்துடனான தொடர்பு மற்றும் பண பரி வர்த்தனைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கு நடிகை ரியா சக்ரவர்த்தி, தனக்கு ஞாபகம் இல்லை என்றே பதில் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரியா சக்ரவர்த்தின், சுஷாந்தின் தற்கொலை காரணம் என சுஷாந்தின் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தயாரிப்பாளர் மகேஷ் பட்டுடன் அவர் நெருக்கமாக இருந்ததே சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதோடு ரியா சக்ரவர்த்தி மகேஷ் பட்டுடன் நெருக்கமாக இருக்கும் பிரைவேட் போட்டோக்களையும் வைரலாக்கினர்.

இதனிடையே ரியா சக்ரவர்த்தியை கைது செய்யுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் #ArrestRhea என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரென்டிங்கில் உள்ள நிலையில், ரியா பல முன்னணி நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.