சீன தூதரக கதவை உடைத்து சோதனையில் ஈடுபட்ட அமெரிக்க அதிகாரிகள்!

0
12

அமெரிக்காவின், ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் கதவு உடைக்கப்பட்டு அமெரிக்க அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது.

குறித்த தூதரகத்தை மூன்று நாட்களுக்குள் மூடுவதற்கு அமெரிக்கா உத்தரவிட்டதைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் தூதரகம் மூடப்பட்டகையோடு அதிகாரிகளால் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி தரவுகளைத் திருடுவதாகவும் சீனாவின் உளவு செயற்பாட்டிலும் இந்த தூதரகம் ஈடுபட்டுவந்துள்ளதாகத் தெரிவித்து இதனை மூடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, நேற்று பிற்பகல் தூதரகம் அதிகாரபூர்வமாக மூடப்பட்டு இராஜதந்திரிகள் வெளியேறினர். இதையடுத்து சில மணிநேரங்களுக்குப் பின்னர் அமெரிக்க அதிகாரிகளால் தூதரகத்தின் பின்கதவு உடைக்கப்பட்டு ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்ட சிறிது நேரத்தில், தூதரக ஊழியர்கள் ஆவணங்கள் போன்று பலவற்றை தீயிட்டு எரித்ததாக்த தெரிவிப்பட்ட நிலையில் தீயணைப்புப் படையினர் தூதரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறுதான், அமெரிக்க அதிகாரிகளால் நுழைய முடியாத அளவு இரும்புக் கோட்டையாக தூதரக அலுவலகம் இருந்துள்ளதாகவும், பல முக்கிய உளவு வேலைகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தும் தகவல் தொடர்பு மையமாக இந்த தூதரணகம் இருந்துள்ளதாகவும் அமெரிக்க தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தூதரகத்தை மூடுவதங்கான உத்தரவை அமெரிக்கா மீளப்பெற வேண்டுமென சீன கோரியிருந்தது. இதையடுத்து அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவின் செங்குடுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை 72 மணி நேரத்துக்குள் மூட சீனா உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.