சீன நிறுவனத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

0
23

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்த சீன நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த நெடுஞ்சாலை பணிகளுக்காக கருங்கற்களை பெற்றுக்கொள்ள சென்ற வேளையிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கையினை வெளிப்படுத்தியுள்ளனர்.

கருங்கற்களை உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்களால் குடியிருப்புக்களுக்கு சேதம் ஏற்படுவதாகவும் ஆகையினால் அதனை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.