சுரேன் ராகவன் குறித்த அளுத்கம இந்திரரதன தேரர் தெரிவித்த கருத்து… கிளம்புகிறது புதிய சர்ச்சை

0
91

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவன் இரட்டை குடியுரிமை பெற்றவர் என சிங்கள பொது அமைப்புகள் ஒன்றியத்தின் உறுப்பினர் அளுத்கம இந்திரரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.

சுரேன் ராகவன் இரட்டை குடியுரிமை பெற்றவர் என்று எமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நாங்கள் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம்.

அத்துடன் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்துள்ளார். அவரது குடியுரிமை பற்றி தேர்தல் ஆணைக்குழு ஆராயும் என நாங்கள் நினைக்கின்றோம் என அளுத்கம இந்திரரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.