சுற்றுலாப் பயணிகளுடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ்… 27 நபர்களின் கதி?

0
11

கனடாவில் சுற்றுலா பஸ்ஸொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஜாஸ்பர் தேசிய பூங்காவில் உள்ள மலைப்பகுதிகளிலேயே இந்த சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.

பனிப் பாறைகளை பார்வையிடுவதற்காக 27 சுற்றுலாப் பயணிகளுடன் சென்றே பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் தற்போது ஆல்பர்ட்டா வைத்தியசாலையில் அனுமதிக்கட்டும் உள்ளனர்.

விபத்தினையடுத்து ஹெலிகொப்டர் மற்றும் அம்பியூலன்ஸ் மூலமாக மீட்பு பணிகள் இடம்பெற்றுள்ளதுடன், விபத்துக்கான காரணம் தொடர்பிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.