சுவிஸில் நாளொன்றுக்கு சுமார் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்!

0
8

சுவிஸில் நாளொன்றுக்கு சுமார் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே சுவிஸில் மாத்திரம் தினமும் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக பெடரல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மருத்துவ துறையில் மட்டும் 1.5 முதல் 2 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இதுதவிர பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகளுக்கு செல்லும் மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்துகின்றனர்.

இதில் 70 சதவிகித முகக்கவசங்கள் சீனாவில் இருந்தும், 30 சதவிகித முகக்கவசங்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.