சுவையான ஹோட்டல் ஸ்டைல் இறால் சுக்கா

0
40

இறால் சுக்கா தென்னிந்தியாவின் கடலோர மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது. நாவில் எச்சில் ஊறும் ஹோட்டல் ஸ்டைல் இறால் சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பெரிய இறால் – அரை கிலோ

குடைமிளகாய் (சிவப்பு மற்றும் மஞ்சள்) – 1
கல் பாசி – சிறிதளவு
அன்னாசி பூ – 2
காய்ந்த மிளகாய் – 10
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
இஞ்சி- பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – அரை  தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

இறாலை நன்றாக கழுவி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து ஊறவைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மஞ்சள் தடவிய இறாலைபோட்டு பொரித்து எடுக்கவும்.

சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடை மிளகாயை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அன்னாசி பூ மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு கலவையை போட்டு கோல்டன் பிரவுன் நிறம் வரும் வரை வதக்கவும்.

அதனுடன் மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தக்காளி மற்றும் உப்பு போட்டு தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கவும்.

கடைசியாக வறுத்து இறால் மற்றும் வெட்டிய குடை மிளகாயை சேர்க்கவும்.

வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் வெட்டிய பச்சை மிளகாயை அலங்காரமாக வைத்து பரிமாறவும்.

சூப்பரான இறால் சுக்கா ரெடி.