ஜனாதிபதி கோத்தபாயவின் உத்தரவு… மட்டற்ற மகிழ்ச்சியில் பட்டதாரிகள், குறைந்த வருமானம் பெறுவோர்

0
78

பொதுத் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்காக 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சில வாரங்களில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்.

தெரிவு செய்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கை பெப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு ஆரம்பிக்கப்பட்டது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்குவதற்கான செயலணி ஒன்றும் நிறுவப்பட்டது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொதுத் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.