டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்தும் நோக்கில் 75 ஆயிரம் கோடி முதலீடு

0
15

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்த உதவும் நோக்கில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளதாக கூகுள் தலைமை செயலக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இட்டுள்ள ருவிட்டர் பதிவில், “இந்தியாவின் எதிர்காலத்தின் மீதும் அதன் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீதும் கூகுள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த நிதித் திட்டத்தை அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு இந்தியருக்கும் அவரது தாய்மொழியான ஹிந்தி, தமிழ், பஞ்சாபி உள்ளிட்டவற்றில் குறைந்த செலவில் தகவல் தொழிலநுட்ப வசதியை அளிக்கவும் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய மற்றும் பொருள்களை உருவாக்கவும் இந்த நிதியில் இருந்து முதலீடு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையில் மாற்றங்களை எற்படுத்துவது பற்றி சுந்தர் பிச்சையுடன் விவாதித்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.