தகவல் வழங்குபவர்களுக்கும், பொலிசாருக்கு உதவுபவர்களுக்கும் இனி பணப்பரிசு… மகிழ்ச்சியில் இலங்கை மக்கள்…

0
74

இலங்கையில் செயற்படும் பாதாள உலக குழுவினரிடம் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உட்பட பாரிய ஆயுதங்கள் உள்ளதாக புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது.

இழப்புக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் கொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறான ஆயுதங்களை பாதாள உலகக் குழுவினரால் மறைத்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பில் தகவல் வழங்கும் நபர்களுக்கும் மற்றும் பொலிசாருக்கு உதவுபவர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.