தனித்தவில் வாசிக்கும் தமிழ் அரசு கட்சி!

0
12

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடும் நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து செயற்பட ஆரம்பித்துள்ளது. நேற்று கிளிநொச்சி பூநகரி பகுதியிலும் தமிழ் அரசு கட்சி சார்பில் பிரச்சார கூட்டம் இடம்பெற்றது.

இதில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் அழைக்கப்படவில்லை.

மாலை 5மணிக்கு பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் ஜெயக்காந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் அரசு கட்சியின்வேட்பாளர்களான சிவஞானம் சிறீதரன், சுமந்திரன், சசிகலா ரவிராஜ், ஆர்னோல்ட் வடக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.