இலங்கையில் 24 மணித்தியாலங்களில் 30 பேர் கைது

0
14

இன்று (23) காலை 6 மணிமுதல் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 705 ஆக அதிகரித்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகள் மீது 11 இடங்களில் ரெப்பிட் என்டிஜன் சோதனை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.