தன்னை விட 40 வயது சிறியவரை திருமணம் செய்து கொண்ட மூதாட்டி..!!

0
9
8 / 100

பிரித்தானியாவை சேர்ந்த எட்னா என்ற மூதாட்டி 40 வயது வித்தியாசம் கொண்ட இளைஞனை திருமணம் செய்து கொண்டார்!

“திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்” என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.

அதுவும், இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், பிரித்தானியாவை சேர்ந்த எட்னா என்ற மூதாட்டி 40 வயது வித்தியாசம் கொண்ட இளைஞனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் எட்னா மார்ட்டின், சிமோன் என்ற தம்பதிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். இதில் எட்னாவை விட சிமோன் 40 வயது வித்தியாசம் கொண்டவர். இருப்பினும் அவர்கள் வாழ்க்கை குறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். வயது வித்தியாசத்தை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை.