தமது மனைவியை சுட்டு கொலை

0
14

மாத்தளை நாவுல கொடஉல்பத்த பகுதியில் தமது மனைவியை சுட்டுக்கொன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாயத்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து நேற்றிரவு (04) இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பயன்படுத்திய துப்பாக்கியும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 57 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.