தமிழகத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் தாய் உயிரிழந்த சம்பவம்

0
33

தமிழகத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் தாய் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் பவித்ரா கர்ப்பமடைந்த நிலையில், அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து நேற்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சந்தோசத்தில் ஒட்டு மொத்த குடும்பமே மகிழ்ச்சியாக இருக்க, ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை.

ஏனெனில், குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் பவித்திராவுக்கு அதிகமான இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்றும் புரியாமல் தவித்த உறவினர்கள் பவித்திராவை உடனடியாக வேறொரு தனியார் மருத்துவமனைக்குக் அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு போதிய வசதிகள் இல்லாததால், அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் பவித்ராவை அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், பவித்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அந்த சோகத்திலே பவித்ராவுக்கு பிரசவம் நடைபெற்ற மருத்துவமனைக்கு சென்று உங்களின் சிகிச்சை குறைபாடு காரணமாகத் தான் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபர்பபு நிலவியதால், உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிசார், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.