தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அனைத்து பதவிகளிலிருந்தும் மணிவண்ணன் நீக்கம்

0
7

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை நீக்கும் முடிவை இன்று அவருக்கு பதிவு தபாலில் அனுப்பி வைத்திருக்கிறோம் அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கும் போது…

13ஆம் திகதி இரவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூடி ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. விசேடமாக மணிவண்ணன் தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

அந்த முடிவுகளை நாங்கள் நேற்று இரவு எழுத்துமூலமாக மணிவண்ணனிற்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டது. அந்த அறிவித்தல் பதிவு தபாலில் இன்று அனுப்பி வைக்கப்படும்.

அதை படித்து விட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என மேலும் தெரிவித்தார்.