தயாரிப்பாளர் ரவீந்திரன் எல்லாம் ஆம்பளையா… சூர்யாதேவி அந்த தொழில் செய்கிறார்…ஆவேசமாக பேசிய வனிதா!

0
192

தயாரிப்பாளர் ரவீந்திரன் ஒரு ஆம்பளையா என்றும் சூர்யா தேவி பலான தொழில் செய்கிறார் என்று கூறியும் விளாசி உள்ளார் நடிகை வனிதா.

நடிகை வனிதா நேற்று போரூர் காவல் நிலையத்தில் யூட்யூப் பிரபலம் சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் மீது புகார் அளித்தார். அவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து தன்னை பற்றி தவறாக பேசுவதாக குற்றம்சாட்டினார்.

அவர்கள் தனது கேரக்டரை கீழ்த்தரமாக பேசுவதால் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதாக கூறினார். தனக்கு ஃபேமிலி சப்போர்ட் இல்லாததால் துணை வேண்டும் என்பதற்காக தான் திருமணம் செய்து கொண்டதாக கூறி கதறினார் வனிதா.

அவரை தொடர்ந்து பேசிய அவரது வழக்கறிஞர் வனிதா குறித்து ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வரும் சூரியா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும் பப்ளிசிட்டிக்காக வனிதாவை பற்றி பேசுவதாகவும் கூறி அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து மீண்டும் பேசிய வனிதா, தயாரிப்பாளர் ரவீந்திரனையும் சூர்யா தேவியையும் ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பேசியதை வைத்து இப்போது என்னை கேள்வி கேட்கிறார்கள். அது போட்டி, இது வாழ்க்கை, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை.

என்னைப்பற்றி தவறான வீடியோக்களை வெளியிடும் சூர்யா தேவி கஞ்சா விற்கிறார். அது மட்டும் அவரது தொழில் அல்ல. மேலும் பல தவறான தொழில்களை செய்து வருகிறார். பல ஆண்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளது. அவர் ஒரு பெண் என்பதால் என் லாயர் அதைப்பற்றி சொல்லவில்லை.

எங்களுக்கு அந்தளவுக்கு டீசன்ஸி இருக்கு. அவருக்கு கஞ்சா விற்பதையும் தாண்டி வேறு மாதிரியான தொழிகளும் உள்ளன. அந்த மாதிரி தொழிலை செய்துக்கொண்டு அவரெல்லாம் கலாச்சாரம் சீரழிகிறது என பேசக்கூடாது. எப்படி வேணும்னாலும் பணம் சம்பாதிக்கலாம் என்று பேசுகிறார்.

கொரோனாவால் இறப்பவர்களை காட்டிலும் இதுபோன்ற மன அழுத்தத்தால் இறப்பவர்கள்தான் அதிகம். ஒவ்வொரு உயிரும் முக்கியம்தான். இந்த மாதிரி டிப்ரஷனால எவ்ளோ பேர் ஹார்ட் அட்டாக் வந்து சாகறாங்க. எனக்கு குழந்தைங்க இருக்காங்க. இதுக்குமேல என்னால போராட முடியாது.

சிங்கிள் மதரா இருந்துக்கிட்டு எவ்வளோதான் நானும் அனுபவிப்பது. ரவீந்திரனெல்லாம் ஒரு ஆம்பளையா? ஒரு மனுஷனா? அவன் மூஞ்ச உடைச்சுருவேன்னு சொல்றான்.. அவன்லாம் தயாரிப்பாளரா? புரெடியூசர் கவுன்சில் அவன தூக்கி போடனும்.. எல்லாமே தப்பா இருக்கு.. என அவன் இவன் என்று ஏக வசனத்தில் ஆவேசமாக பேசினார் வனிதா.