தல டோனி ஓய்வை அறிவித்து சில நிமிடங்களில் ரெய்னாவும் ஓய்வு அறிவிப்பு… என்ன சொன்னார் தெரியுமா?

0
62

இந்திய அணியின் வெற்றி கேப்டன் டோனி ஓய்வு அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலே மற்றொரு வீரரான ரெய்னாவும் ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படும் டோனி, இன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இது ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவர் ஓய்வு அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலே சின்ன தல என்று அழைக்கப்படும், இந்திய அணியின் மற்றொரு வீரரான ரெய்னாவும் ஓய்வை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டோனியைக் குறிப்பிட்டு உங்களுடன் விளையாடிய அழகான நாட்கள், இந்த பயணத்தில் உங்களுடன் நானும் பெருமிதத்துடன் சேருகின்றேன், ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.