தழர்கள், முஸ்லிம்கள் தொடர்பில் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ள கருத்து

0
13

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் – முஸ்லிம் சமூகத்தினருக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கும், அரசியலமைப்பு சார் பிரச்சினைகளுக்கும் முரணற்ற விதத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பு சார் பிரச்சினைகளுக்கு தீர்வு முரண்பாடற்ற விதத்தில் பெற்றுக் கொடுக்கப்படும்.

பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை தொடர்ந்து புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றார்.