தான் எதிர்பார்த்த அமைச்சு பதவி கிடைக்காமையினால் மன வருத்தத்தில் பிரபல அரசியல்வாதி

0
689

தான் எதிர்பார்த்த அமைச்சு பதவி கிடைக்கவில்லை என கூறி நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய பிரபலம் ஒருவர் வருத்தத்தில் இருப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஆதரவாளர்கள் சிலருடன் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

தனக்கு அவசியமான அமைச்சு பதவி தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் தகவல் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் கடைசி வரையில் தான் எதிர்பார்த்த அமைச்சு கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.

இதன்போது கடந்த அரசாங்கங்களின் போது அமைச்சுகளை வகித்த சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு எந்தவித அமைச்சும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.