திருகோணமலை படகு கவிழ்ந்து ஒருவர் பலி

0
10

திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் இருந்து இன்று காலை 5.45 மணியளவில் சிறிய படகில் 4 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றதில் படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை – திருக்கடலூர் ஹர்தாஸ் வத்த பகுதியைச் சேர்ந்த ஈ.ஜே.ஏ.ஜான் (45 வயது) என்பவரே உயிரிழந்தவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

படகு கவிழ்ந்ததில் மூவர் நீந்திய நிலையில் மற்றவர் நீரில் மூழ்கியதாகவும் அதனை அடுத்து அவரை மீட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மீனவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது