திருகோணமலை மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர் ஒருவருக்கு கொரோனா

0
12

திருகோணமலை மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குறித்த மருத்துவர், விடுமுறையில் வீட்டுக்குச் சென்று விட்டு, கடந்த 27ஆம் திகதி, மருத்துவமனைக்குத் திரும்பியிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த மருத்துவர் 5ம், 06 ஆம் இலக்க விடுதிகளில் பணியாற்றியவர் என்றும், அவரை கொழும்பு தொற்று நோயியல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் திருகோணமலை பொது மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.