திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள்

0
16

இந்தியாவில் திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் வாரணாசியை சேர்ந்த முகமது அப்தப் என்ற நபரும், பூஜா படேல் என்ற இளம்பெண்ணும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு 12 மணிக்கு முகமது, பூஜா அறை கதவை வேகமாக தட்டியபடி அலறியுள்ளார்.

அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்த நிலையில் கதவை உடைத்து பார்த்த போது பூஜா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை பொலிசார் உறுதி செய்தனர்.

இதனிடையில் முகமது மற்றும் அவர் குடும்பத்தாரின் கொடுமையால் தான் பூஜா தற்கொலை செய்து கொண்டார் என அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

புகாரை தொடர்ந்து முகமது கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசார் கூறுகையில், பூஜாவுக்கு மொடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என ஆசை இருந்தது.

ஆனால் இதற்கு அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் தடை போட்டுள்ளனர்.

அதே போல பூஜா மதம் மாற வேண்டும் என கணவர் குடும்பத்தார் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

மேலும் பூஜா தந்தை எங்களிடம் பேசும் போது, பூஜாவை முகமதின் தாய்க்கு பிடிக்கவில்லை, இதனால் மகனை வைத்து அவரை கொடுமைப்படுத்தினார்.

மது அருந்திவிட்டு தினமும் பூஜாவுடன் சண்டை போட்டிருக்கிறார், இது கொலையாக கூட இருக்க வாய்ப்புள்ளது என கூறியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.