திருமணமான இளம் பெண்ணின் மோசமான செயல் : 17 வயதான மாணவனை பொலிஸார் கைது

0
59

இளம் வயது ஆண் பிள்ளைகளை ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாக்கி, அவர்களுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

தம்புள்ளை நவ பாதெனிய பிரதேசத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி.எதிரிசிங்கவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம், மோசடி தடுப்பு பிரிவின் பொலிஸார் இணைந்து நவ பாதெனிய பிரதேசத்தில் வீடொன்றை சோதனையிட்டுள்ளனர்.

அந்த வீட்டில் இளம் வயது சிறுவனுடன் ஆபாசமாக செயலில் ஈடுபட்ட 17 வயதான மாணவனை 820 மில்லி கிராம் ஹெரோயினுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுச்சி என்று அழைக்கப்படும் செல்வத்துரை சுலோச்சனா என்ற இந்த யுவதி இரண்டாவது கணவனையும் கைவிட்டு, 15 முதல் 17 வயதான ஆண் பிள்ளைகளை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி, பாலியல் செயற்பாடுகளில் பயன்படுத்தி வந்துள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த பெண் கைது செய்யப்பட்டதை அடுத்து தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நவ பாதெனிய பிரதேசத்தை சேர்ந்த பெற்றோர், குறித்த பெண் பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது முதல் 16 வயதான பத்து சிறுவர்களுடன் பழகி வந்துள்ளதுடன் அவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கியுள்ளதாக கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள யுவதிக்கு எதிராக போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரவுள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புனர்வாழ்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தம்புள்ளை தலைமையாக பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.