தீவிரமடையும் கொரோனா பரவல்! உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை

0
19

உலக சுகாதார அமைப்பு புதிதாக வெளியிட்ட அறிக்கையின்படி கொரோனாவின் சமூக பரிமாற்றத்தை நான்கு நிலைகளாக மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் பல சுகாதார வல்லுநர்கள் இலங்கை கொரோனா தொற்றில் ஏற்கனவே 3 வது நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் புதிய வகைப்பாட்டின் படி, நிலை 3 என்பது, கடந்த 14 நாட்களில் உள்நாட்டில் பரவலாக கண்டறியப்பட்ட அதிக தொற்றுக்களை குறிக்கிறது.

மேலும் நிலை 3 என்பது வரையறுக்கப்பட்ட மேலதிக எதிர்ப்பு திறன் மற்றும் சுகாதார சேவைக்கு ஆபத்தான சமூக பரிமாற்றத்தின் நிலைமை என வரையறுக்கப்படுகிறது,

இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ள சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜெயருவன் பண்டார, இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்ட சூழ்நிலையில் இருக்கிறது.

எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் பொதுமக்களின் ஆதரவு தேவை என குறிப்பிட்டார்.