தீ விபத்தில் சிக்கி 7 கொரோனா நோயாளிகள் பலி… ஆந்திராவில் கொடூரம்

0
18

இந்தியாவின், ஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் ஏழு கொரோனா தொற்று நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ஹோட்டல் ஒன்றிலேயே இந்த தீ விபத்தானது இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் குறித்த கட்டிடத்தில் சுமார் 30 கொரோனா தொற்று நோயாளர்களும், பத்து மருத்துவ பணியாளர்களும் இருந்தாக கூறப்படுகிறது.

இந்த ஹோட்டலானது தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்பட்டு வருகிறது.

தீ யாணைப்பு படை வீரர்களின் துரித நடவடிக்கையினால் தீ விபத்தானது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இந்த அனர்த்தத்தினால் ஏழு நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஏனையவர்கள் காயங்களுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு ஏனைய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குஜராத்தின் அகமதாபாத்தில் வியாழக்கிழமை தனியார் கோவிட் -19 நியமிக்கப்பட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.