துருக்கி கிராண்ட் பிரியை வென்று 7-வது முறையாக F1 சாம்பியன் ஆனார் ஹாமில்டன்

0
6

துருக்கி கிராண்ட் பிரியை வென்று இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 7-வது முறையாக F1 சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் ஜெர்மனியின் மைக்கேல் ஷுமாக்கர். இவர் ஏழு முறை பார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்திருந்தார்.
ஷுமாக்கர் பார்முலா ஒன்னில் ஏராளமான சாதனைகளை படைத்திருந்த நிலையில தற்போது மெர்சிடெஸ் அணிக்காக கலந்து கொண்டுள்ள இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் அனைத்து சாதனைகளைளும் உடைத்து வருகிறார்.
இன்று துருக்கி கிராண்ட் பிரி நடைபெற்றது. இதில் ஹாமில்டன் வெற்றி பெற்று பார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளார். இது அவருக்கு 7-வது சாம்பியன் பட்டமாகும். இதன்மூலம் ஷுமாக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
லீவிஸ் ஹாமில்டன் 2008, 2014, 2015, 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.