தேசியப்பட்டியல் விவகாரம்..? கடத்தப்பட்ட விமலதிஸ்ஸ தேரர்

0
6

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரர் கடத்தப்பட்டுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெதினிகம விமல திஸ்ஸ தேரரை அத்துரலிய ரத்ன தேரரே இறுதியாக அழைத்துச் சென்றதாக கட்சியின் ஊடக செயலாளர் ஹுனுபிட்யே சந்திரசிரி தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துரலியே ரத்ன தேரரின் வாகனத்தில் ஜனாதிபதியை சந்திக்க சென்ற நிலையிலேயே அவர் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக நிலவி வரும் தேசியப்பட்டியல் விவகாரம் காரணமாக அவர் கடத்தப்பட்டிருக்கலாமென தென்னிலங்கையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.