தேயிலை தோட்டத்தில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சிறுத்தை புலி

0
27


மஸ்கெலியா ப்ரவன்லோ தேயிலை தோட்டத்தில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சிறுத்தை புலியொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான ப்ரவன்லோ தேயிலை தோட்டத்தின் பாடசாலைக்கு மேல் பகுதியில் சிறுத்தை புலியொன்றின் சடலமொன்று உள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் சிலரால் நல்லதன்னி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தை புலியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சுமார் 6 வயது மதிக்கத்தக்க சிறுத்தை புலி ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், தலைப்பகுதிக்கு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதால் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் வனவிலங்கு அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுத்தைக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.