தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பல் உடைந்த அதிர்ச்சியில் செய்தியாளர்

0
17

தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் செய்திவாசிப்பாளர் தன் பல் விழுந்த நிலையில் அவர் நடந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

சமூக வலைதளங்களில் பல ஆச்சரியம் நிறைந்த தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் கற்பனைக்கெட்டாத வகையிலான வீடியோக்கள் வெளிவருவதுண்டு. அப்படிதான் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பொதுவாக டிவி நிருபர்கள் மற்றும் செய்தி அறிவிப்பாளர்கள், நேரடி ஒளிபரப்பின்போது வித்தியாசமான அனுபவங்களை எதிர்கொள்ளவதுண்டு. ஆனால் நடக்கும் அனைத்தையும் அவர்கள் நிர்வகிப்பது மிகவும் கடினமான ஒன்று. உக்ரேனிய தொலைக்காட்சி ஒன்றில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் மரிச்சா படல்கோ. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவரது பல் உடைந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் பெரும்பாலானவர்கள் திகைப்படைந்திருப்பார்கள் அல்லது அல்லது சிரிப்பார்கள்.

ஆனால் படல்கோ சிறிதும் பதற்றமடையாமல், கிழே விழுந்த பல்லை புத்திசாலிதனமாக கைகளால் பிடித்ததுடன், தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை தொடர்ந்தார். அந்த நேரத்தில் எந்த நிகழ்வும் நடக்காதது போல் நடந்து கொண்ட செயல் டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.