நடிகர் விஜய்க்கு சொந்தமான இலங்கையில் உள்ள அனைத்து சொத்துக்களும் பறிமுதல்..?

0
1291

தென்னிந்திய நடிகர் விஜய்க்கு சொந்தமாக இலங்கையில் உள்ள சொத்துக்கள் சுவீகரிக்கப்படுவதாக வெளியான செய்தியை அவரது தரப்பினர் நிராகரித்துள்ளனர்.

டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜயின் மனைவி சங்கீதா இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்.

அவரது அறிவுறுத்தலில் நடிகர் விஜய் இலங்கையில் கொள்வனவு செய்த சொத்துக்கள் சுவீகரிக்கப்படுவதாக இணையத்தளங்களில் கடந்த தினங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

எனினும் இந்த தகவலை நடிகர் விஜயின் தரப்பினர் நிராகரித்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.