நயன்தாராவிற்கு அமைந்தது போன்று எனக்கு அமையவில்லை… ஆண்ட்ரியா

0
19

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் முதன்முதலாக மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் பிரபலமானார்.

அதன்பின் 2010ஆம் ஆண்டிலிருந்து நயன்தாராவிற்கு கிடைத்த சூப்பர்ஹிட் படங்களால் தற்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பெருமைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.

இத்தகைய முன்னணி நடிகையான நயன்தாராவிற்கு கிடைத்த வாய்ப்பு, எனக்கு கிடைக்கவில்லை என்று மனம் குமுறுகிறார் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா.

ஏனென்றால் நயன்தாராவின் வளர்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜீத் என முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் வரிசைகட்டி சென்றதால் அவர் எளிதாக வளர்ச்சி அடைந்தார்.

ஆனால் எனக்குக்கு அப்படி இல்லை என்கிறார் ஆண்ட்ரியா. ஏனென்றால், ஆண்ட்ரியா நடித்துள்ள படங்களில் எல்லாம் கதை மற்றும் அவருடைய நடிப்பினாலே அடையாளம் காணப்பட்டாராம்.

ஒரு படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே நான் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன் என்றும் வெளிப்படையாக தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.