நல்லூரானுக்கே இந்த நிலைமை என்றால்… மக்களுக்கு? (படங்கள் இணைப்பு)

0
107

நேற்யை தினம் நள்ளிரவு கடந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் பரவலாக கன மழை பெய்துள்ளது.

இதன்போது யாழ் நகரத்தின் மையப்பகுதி மற்றும் நல்லூர் கோயில் அமைந்துள்ள பகுதி உட்பட பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி அப் பகுதியில உள்ள வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் என்பவற்றிலும் நீர் புகுந்துள்ளது.

இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை நிசா புயல் தாக்கியிருந்தது.

இதன்போதும் இவ்வாறான நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் இவ் அனர்த்தம் இடம்பெற்று 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் சன நெரிசல் கூடிய நல்லூர்ப் பகுதியில் இப் பிரச்சினைக்கு இன்றுவரை தீர்வு காணப்படாது இருக்கின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.