நல்லூரில் தம்பதியினரின் அநாகரிகச் செயல்… அதிரடியாகக் கைது

0
37

நல்லூர் உற்சவத்தின் தீர்த்த திருவிழாவான இன்று தங்கச் சங்கிலியை திருடினர் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகியோர் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்று இடம்பெற்றது. உற்சவத்தில் நல்லூர் கந்தன் தீர்த்தக்கேணியில் தீர்த்தமாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த பக்தர்களிடம் தங்கச் சங்கிலியை திருடினர் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு தங்கச் சங்கிலிகளை மீட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த தம்பதியினர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.