முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பமாகும் நாடாளுமன்ற அரசியல்

0
8

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகிய உறுப்பினர்கள் இன்றையதினம் முள்ளிவாய்க்காலில் வைத்து உறுதிப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளனர்.

அவர்களின் நாடாளுமன்ற அரசியல் பயணமானது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த குறித்த மண்ணிலிருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள், நாடானுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் அங்கு கூடியுள்ளதாக தெரியவருகிறது.

முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள த.தே.ம.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.