நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை கௌரவிக்கும் நிகழ்வு…

0
6

நாடாளுமன்றத்திற்கு தெரிவான கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை பாராட்டும் நிகழ்வு கிளிநொச்சி – ஆனந்தபுரத்தில் நடத்தப்பட்டுள்ளது.

ஆனந்தபுரம் எழுச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்றத்திற்கு தெரிவான சி.சிறீதரன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள கரும்புலி மாவீரர் ஒருவரின் தாயாருக்கு உதவி தொகையும், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.