நாட்டை ஒருபோதும் முழுமையாக முடக்க முடியாது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…

0
17

நாட்டை முழுமையாக ஒருபோதும் முடக்கிவைக்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுகாதார நெறிமுறைகளுடன் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்க தயாராக வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

“நாளாந்தம் நான் அலுவலகத்திற்குச் செல்லும்போது, பொதுவாக அம்புல்தெனிய சந்திக்கு அருகில் தினசரி கூலி வேலை செய்பவர்கள் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மாத ஊதியம் பெறுபவர்களை விட, நாட்டை முடக்குதல் அவர்களை பெருமளவில் பாதிக்கும்”என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்