நீங்களும் சானிடைசர் பயன்படுத்துபவரா..? மிகவும் அவதானமாக இருங்கள்…

0
73

இன்று கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் சானிட்டைசர் பயன்படுத்தி வருகின்றோம்.

சானிட்டைசரில் ஆல்கஹால் கலந்தது, ஆல்கஹால் கலக்காதது என்று இரு வகை சானிடைசர்கள் உண்டு. ஜெல், நுரை, திரவம் எனப் பல வடிவங்களில் சானிடைசர் கிடைக்கிறது.

இருப்பினும் சிலருக்க சானிடைசரை சரியான முறையில் பயன்படுத்த தெரியவில்லை. இதனால் பல பக்கவிளைவுகளை சந்தித்து கொண்டு வருகின்றார்கள்.

இதிலிருந்து விடுபட வேண்டுமாயின் சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

சானிட்டைசரில் ஆல்கஹாலுக்கு பதிலாக ட்ரைக்ளோசன் உள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பொருள். இவை பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகளில் பயன்படுகிறது. இது சருமத்தால் எளிதில் உறிஞ்சப்படலாம், இது தைராய்டு செயல்பாட்டை பாதிக்கும் மற்றும் கல்லீரல் மற்றும் தசைகளின் செயல்பாட்டையும் பாதிக்கக் கூடியது.

சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சுத்தப்படுத்த சானிட்டைசரை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் சானிட்டைசரில் ஏராளமான கெமிக்கல்கள் உள்ளன. இதை அடிக்கடி உபயோகிப்பது நம் நோயெதிரிப்பு சக்திக்கு தீங்கு விளைவிக்கும்.

குழந்தைகள் அடிக்கடி சானிட்டைசர் பயன்படுத்துவதை தவிருங்கள். ஏனெனில் குழந்தைகள் கைகளில் சானிட்டைசருடன் சாப்பிட்டால் அதிலுள்ள ஆல்கஹால் விஷத்தை உண்டாக்கும். இது அவர்களின் நோயெதிரிப்பு சக்தியையையும் சேதப்படுத்தும்.

கூடுதல் வாசனையுள்ள சானிட்டைசர்கள் பயன்படுத்துவதை தவருங்கள். ஏனெனில் கூடுதல் வாசனையுடன் இருந்தால் அதில் இன்னும் கூடுதல் நச்சுக்களும் கெமிக்கல்களும் சேர்க்கப்படுகிறது. செயற்கை வாசனை நிலவினால் அதில் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் நிறைய உள்ளன. அவை எண்டோகிரைன் என்ற சீர்குலைப்பை ஏற்படுத்துகிறது.

சானிட்டைசரை பயன்படுத்தி விட்டு நெருப்பிற்கு அருகில் செல்ல வேண்டாம். ஏனெனில் இதை பயன்படுத்தி விட்டு அடுப்பு வேளை மற்றும் நெருப்பிற்கு அருகில் வேலை செய்வது உங்களுக்கு கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்தும். மேலும் சானிட்டைசர்கள் உங்களுக்கு உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

காரில் உள்ள சானிட்டைசர் பாட்டிலை நன்றாக மூடி வையுங்கள். திறந்த நிலையில் இருக்கும் போது அது ஆவியாகி கார் பற்றிக் கொள்ள நிறைய வாய்ப்பு உள்ளது.

மாஸ்க்களை பயன்படுத்தும் போது அதில் சானிட்டைசர் கொண்டு சுத்தப்படுத்தாதீர்கள். நீங்கள் நீரில் கழுவினாலும் மாஸ்க் களில் சானிட்டைசர் தங்கி இருக்கலாம். இதனால் மணம் குமட்டல் வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

வேறு வழிகள்

  • சானிட்டைசரை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்
  • சானிட்டைசரை காற்று புகாத பாட்டில்களில் சேகரித்து வையுங்கள்.
  • சானிட்டைசரை உலர்ந்த மற்றும் குளிர்ந்த இடங்களில் வையுங்கள்
  • சானிட்டைசரை சமையல் அறையில் வைக்க வேண்டாம். சமைக்கும் முன்பு கைகளில் பயன்படுத்தக் கூடாது.
  • சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு உங்க மாஸ்க்களை சுத்தம் செய்யுங்கள். ஒரு போதும் சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள்.
  • அடிக்கடி சானிட்டைசர் பயன்படுத்துவதை தவிர்த்து சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுங்கள். அது உங்களுக்கு பாதுகாப்பை வழங்கும்.