நுணாவில் பகுதியில் எரிபொருள் தாங்கி மீது மோதி கார்

0
13

தென்மராட்சி, நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது நேற்று கார் ஒன்று மோதியதில் உயிரிழந்தவர்கள் நாவாந்துறையை சேர்ந்தவர்கள் என்ற தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் யோகதாஸ் மகிழன் (வயது 06), ஆன் டேரோளினி (வயது 30) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த விபத்தில் ஆன் மக்கிலியோட் (வயது 6) என்ற சிறுவனும் கரோலின் (வயது 35) லேபோனியா என்ற இரு பெண்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் சிறுவனும், லேபோனியாவும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கரோலின் நெற்றி ,கைகள் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாவாந்துறையை சேர்ந்த இவர்கள் சரசாலை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே, விபத்தில் சிக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.