நேபாளத்தில் நாய்களுக்கு மாலை அணிவித்து உணவு வழங்கி வழிபாடு

0
7

தீபாவளி பண்டிகையின் 2-வது நாள் கொண்டாட்டத்தில் நேபாள மக்கள் நாய்களை வழிபட்டு, அவைகளுக்கு உணவு வழங்கினர்.

தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். சில மாநிலங்களில் தீபாவளி நான்கு ஐந்து நாட்கள் பண்டிகையாக கொண்டாடப்படும்.

நேபாளத்தில் தீபாவளி பண்டியை ஐந்து நாட்கள் கொண்டாடப்படும். அதில் 2-வது நாள் நாய்களுக்கு மாலை அணிவித்து உணவு வழங்கி வழிபடுவார்கள். மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக இப்படி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இன்று அந்த நிகழ்வுகள் நடைபெற்றன.