நேற்றைய தினம் 11,593 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள்

0
7
11 / 100

நாட்டில் நேற்றைய தினம் 11,593 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 707 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் 9,024 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

1,317 பேருக்கு அஸ்ட்ராசெனகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அத்துடன், 217 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 298 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

35 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.