இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை உத்தியோகப்பூர்வ விஜயம்

0
3
64 / 100

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு செல்லவுள்ளார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இலங்கையில் இருந்து ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை புதிய ஆண்டில் இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் கொவிட் -19 பயண கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை அவதானிக்கப் பட வேண்டிய விடயம்.

இப் பயணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை 7ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திக்க உள்ளதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அரசியல் தரப்பு உள்ளிட்ட தரப்புக்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.