பணத்திற்காக துண்டுகூட கட்ட தாயாராகும் நடிகை?..

0
24

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டுவதும் , அதனை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருவதும் வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் சினிமா துறையில் முதன் முதலாக கால் பதிப்பவர்கள் இதனை செய்தால் பரவாயில்லை. இந்த யுக்தியை வாரிசு நடிகைகளும் சீரியல் நடிகைகளும் செய்வது தான் மிகவும் வேதனையாக உள்ளது. சினிமாவில் இருந்து சீரியலுக்கு போன நடிகைகள் காலம் மலையேறிவிட்டது.

இப்போது சீரியலில் இருந்து சினிமாவுக்கு ஹீரோயின்கள் வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான காதல் படம் ஒன்று தாறு மாறு ஹிட் அடிக்க அந்த ஹீரோயினை புக் செய்ய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வரிசை கட்டி நின்று வருகிறார்களாம்.

ஆனால் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறிக் கொண்டு வந்தார் நடிகை. சம்பளமும் லட்சங்களில் மட்டுமே தர முடியும் என தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

லாக்டவுன் காரணமாக முன்னணி நடிகர்களை பாதி சம்பளம் தான் வாங்குகிறார்கள் என்பதையும் காரணமாக காட்டி நடிகைக்கு குறைந்த சம்பளமே பெசி வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இதையறிந்த அம்மணி பணம் முக்கியம் படவாய்ப்புகள் இப்படி இருந்தால் கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்துள்ளார். அதனால் நடிகை எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார். கர்சீப்பை கட்டிக்கொண்டு கூட நடிக்க தயார் ஆனால், சம்பளத்தில் கை வைக்காதீர்கள் என்று இறங்கி வந்துள்ளார்.

இப்படி கூறிய அடுத்த நாளே இயக்குநர் ஒருவர் நடிகையை புக் செய்துள்ளார். அடல்ட் காமெடி படங்களுக்கு பெயர் போன அவர் அம்மணியை கோடிகளில் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்து கையெழுத்தும் வாங்கி விட்டாராம்.

அந்த நடிகையின் மறுபக்கத்தை நான் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றுகிறார் இயக்குனர். அவர் அடுத்ததாக இயக்கவுள்ள ரொமாண்டிக் படத்தில், ஏகப்பட்ட அடல்ட் காட்சிகளை வைத்து படமெடுக்க திட்டமிட்டு இருக்கிறார் அந்த இயக்குநர்.