பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி

0
12

உத்தரப்பிரதேசத்தில் லக்கிபூரில் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த சிறுமியின் கண்கள் தோண்டப்பட்டு, நாக்கு துண்டிக்கப்பட்டு கொடூர கொலை செய்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கரும்பு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின்படி உடலை மீட்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணையில் அந்த சிறுமி வெள்ளிக்கிழமை மதியம் முதல் காணாமல் போய்விட்டார். அவரை பெற்றோர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அவரது உடல் கரும்பு காட்டில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அந்த சிறுமியின் சடலம் கிடைக்கப் பெற்ற கரும்பு காடு கைதான இருவரில் ஒருவருக்கு சொந்தமானது. இவர்கள் இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வன்கொடுமை, கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த கொடூர சம்பவத்தால் நாடே அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், எனது மகளின் கழுத்தை அவர் அணிந்திருந்த துப்பட்டாவை கொண்டு நெரித்துள்ளார்கள். அவரது கண்களை தோண்டி, நாக்கை அறுத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் லக்னோவிலிருந்து 130 கிமீ தூரத்திற்கு அப்பால் அதாவது நேபாள எல்லைக்கு அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்றது என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி கூறுகையில் மிகவும் வெட்கக்கேடான சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் சமாஜ்வாதி ஆட்சிக்கும் தற்போதைய பாஜக ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என கேள்வி எழுப்பிய மாயாவதி, யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.