பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பரபரப்பு. மாணவர் குழப்பநிலை

0
28

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை ஆறு மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.

இதனையறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்குச் சென்று தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.

அத்துடன், மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு அறிவுறுத்திய பொலிஸார், தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.